Created by Crazyprofile.com

ஆலயத்தின் வரலாறு

ழவள நாட்டின் சிரம் போல் விளங்குவது யாழ்ப்பாணம். தமிழ்பெருங்குடி மக்களின் தானைத் தாயகமான தமிழ்நாட்டிலிருந்து வந்த யாழ்பாடியின் பாடலால் பெருமை பெற்றது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தின் சிகரம் போன்று துலங்குவது நல்லு}ர். ஈழத்தின் திருத்தலங்களில் ஒன்றாக, நல்லாரும், வல்லாரும் தினந்தோறும் வணங்கும் பெரும் தலங்களில் ஒன்றாக, பொலிந்து விளங்குவதும் நல்லு}ரே. நல்லு}ரின் வடக்கே பெயர் பெற்றுத்துலங்கும் தலம் திருநெல்வேலி. பல நு}ற்றாண்டுகட்கு முன்னர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி என்ற இடத்திலிருந்து வந்தவர்கள் இங்கு குடியேறிய காரணத்தினால், இவ்விடமும் திருநெல்வேலி என்ற காரணப்பெயரால் அழைக்கப்பட்டு வருவதாக பேச்சு வழக்கில் கூறப்பட்டு வருகிறது. திரு  நல்  வேலி என்பதே காலக்கிரமத்தில் திருநெல்வேலி என்று அழைக்க ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 'திரு" என்றால் அருள், செல்வம் என்று பொருள்,'நல்" என்றால் நல்லவர்கள் என்றும், நல்ல தெய்வங்கள் என்றும், 'வேலி" என்றால் இடம், தலம் என்றும் பொருள்படும். அருளும் செல்வமும் வாரி வழங்கும் நல்ல பல தெய்வங்கள் எழுந்தருளியிருக்கும் தலம் என்பதாலும், அருளும் செல்வமும் நிறைந்த நல்லவர்கள் வாழும் இடம் என்பதாலும், இத்தலம் திருநெல்வேலி என்று அழைக்கப்படலாயிற்று. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். என்பது சான்றோர் வாக்கு. முழத்துக்கு ஒரு கோயிலைக் கொண்ட புண்ணியதலம் திருநெல்வேலி. இச்சிறு கிராமத்தின் எத்திசை பார்க்கினும் கோயில்களே. இத்தனை அருள் நிறைந்த இத்திருதலத்திலேயே காத்து, அருள்பாலிப்பவன் தலங்காவலன். இதனாலேயே இவ்வாலயத்தின் எழுந்தருயிருக்கும் விநாயகப்பெருமானை 'தலங்காவற் பிள்ளையார்" என்று பக்தர்கள் அழைத்து வருகின்றனர். தந்தை தாயாராகிய சிவனுக்கும், அம்மைக்கும், மூத்த மைந்தனாகிய விநாயகனுக்கும், அருகருகே அழகாகக் கோயில் கட்டி, விழாச் செய்து மகிழ்பவர்கள் திருநெல்வேலி மக்கள். இதனால் நல்ல தெய்வங்களின் அருளும், ஆசியும் பெற்றவர்கள் இங்கு வாழ்வதாலும் இத்தலம் திருநெல்வேலி என அழைக்கப்படுகின்றது. பொருத்தமானதே. இவ்வாறு எல்லா நலனுடனும், பலனுடனும் புகழ்பெற்ற திருநெல்வேலிப் பதியில் நடுநாயகமாக விளங்குவது தலங்காவல் பிள்ளையார் கோயில். இக்கோயிலின் வரலாறு தனித்துவமானது தொன்மையானதுங்கூட தலத்தையே காவல் செய்யும் விநாயகன் என்ற பெயர் பூண்ட விநாயகன் என்றால் சொல்லவும் வேண்டுமா?. யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றி, ஈழத்தின் பல பாகங்களிலும் கூட பல நு}ற்றுக்கணக்கான விநாயகர் ஆலயங்கள் இருக்கின்றபோதிலும் இக்கோயிலின் அமைப்பு ஒர் தனித்துவத்தன்மை பெற்றது என்பதை இதனை அணுகி ஆராய்ந்தால் மட்டும் புரியும். நாரதர் ஆரம்பிர்ர்வைத்த மாம்பழச் சண்டையின்போதும் கூட தந்தை தாயையே உலகம் என்று சுற்றிவந்து, மாம்பழம் பெற்று அவர்கள் அருகிலேயே மூத்த பிள்ளையாகவும், செல்லப்பிள்ளையாகவும் அமர்ந்துகொண்டவனல்லவா விநாயகன். இங்கும் கூட திருநெல்வேலி சிவன்,முத்துமாரி அம்மன் ஆலயங்களுக்கருகிலேயே தனக்கும் கோயில் அமைத்து எழுந்தருளி தனது உரிமையை நிலைநாட்டி, திருநெல்வேலித் தலத்தையே ஆட்சிபுரிகின்றானே! தாயாராகிய உமை அம்மையின் உரிமைப் பிள்ளைதானே என்பதை நிலைநாட்ட, தன்னைத்சுற்றி அரசடி அம்மன், வாலை அம்மன் அவற்றின் நடுநாயகமாக நின்று திருநெல்வேலித் தலத்தையே காவல் செய்யும் தலங்காவலன் பெருமையை, அழகை, ஆட்சிச்சிறப்பை எவ்வாறு புகழ்வது? காணக்கண்ணாயிரம் மட்டும் இருந்தால் போதாது. பல்லாயிரம் கண்கள் வேண்டுமே இந்த ஆனந்த அழகை அள்ளிப்பருக. சிவனின் மூத்த குமாரர், விநாயகர். விநாயகர் என்றால் தனக்குமேல் ஒரு தலைவர் இல்லாதவர் என்பது பொருள். சிவனும் விநாயகரும் ஒருவரே தேவர்களின் துயர்துடைக்க விநாயகன் பிரணவத்தினின்றும் தோன்றினர். என்பது வரலாறு. இவரது திருமேனி ஞானமயமானது. இடர்களைப் போக்குபவன். விக்கினங்களை நீக்குபவனாதலால், விநாயகன் முதலில் வழிபடுவதற்குரியவன் என்பது சமயாசாரியர், சந்தனாசாரியர்களது வாக்கு. கயமுகாசுரனின் துன்பத்தால் வருந்திய தேவர்கள், திருக்கைலை மலைக்குச் சென்று தங்கள் துன்பத்தை நீக்கி அருளுமாறு சிவனை வேண்டினர். சிவன் பார்வதி சமேதரராய் நந்தவனத்துக்குச் சென்று, அங்குள்ள சித்திர மண்டபத்தில் எழுந்தருளி சித்திரங்களை நோக்கினார். சித்திரங்களில் ஒன்றாயிருந்த சிவசக்தி பிரணவம், சிவனது திருவருளால், ஆண்டவன் எழுத்தாகிய 'அக்ரம்!" ஆண்யானையாகவும் அம்மை எழுத்தாகிய 'உகரம்" பெண் யானையாகவும் காட்சியளிக்க, அங்கு யானை முகத்துடன் கூடிய விநாயகப்பெருமான் திருஅவராதம் செய்தார். சிவனின் சிரே~;ட புதல்வனான விநாயகன், திருநெல்வேலி தலங்காவலில் குடிகொண்டிருக்கும் வரலாறு பழமையானது. தொன்மையானது. இங்கு கோயில் கொண்டிருக்கும் நிலத்தை ஐந்து தலைமுறைகளுக்கு முன்னர் பூசகர் ஒருவர் தாமே பணம் கொடுத்து வாங்கி, சிறு கோயில் கொண்டருளிய பிள்ளையாரை தினமும் அர்ச்சித்து வந்தார். ஆதியில் இங்கு கோயில் கொண்டருளிய பிள்ளையாரை மக்கள் சிலை வடிவிலே பூஜித்து வந்தனர். இச்சிலையை அடுத்து ஒர் அழிஞ்சில் மரம் இருந்தமையால், அடியார்கள் அழிஞ்சிலடிப் பிள்ளையார் என்று இம்மூர்த்தியை போற்றி வழிபட்டுவந்தனர். இவ்வாலயத்தை, யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் இராசாக்கள் (மன்னர்கள்) நன்கு ஆதரித்து வந்ததாக வரலாறு கூறுகின்றது. காலக்கிரமத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராஜசேகரன் என்னும் மன்னர் நல்லு}ரைத் தனது ராஜதானியாக அமைத்து ஆட்சி நடாத்திவந்த போது தனது வழிபாட்டுக்காக நல்லைநாத சுவாமி கோயிலை ஜமுனாரிக்கு அருகில் அமைத்தான் இக்கோயில் இப்பொழுது நல்லு}ர் சட்டநாதர் சுவாமி கோயிலில் என அழைக்கப்படுகின்றது. பரராஜசேகரன் தனது குலதெய்வமான நல்லைநாத சுவாமிக்கு காவற்தெய்வகளாக நான்கு திசைகளிலும் நான்கு பிள்ளையார் கோயில்களை அமைத்தான். தலங்காவற்பிள்ளையார், கைலாசபிள்ளையார், வெயில்விழுந்த பிள்ளையார், பரராஜசேகரப்பிள்ளையார் ஆகியவை இவை நான்குமாம். தலங்காவற் பிள்ளையார்கோயிலின் தெற்கே காயோராகணசிவன் என அழைக்கப்படும் திருநெல்வேலி சிவன் கோயிலும் கிழக்கே காயாரோகண பூதராயர் கோயிலும் இருக்கின்றன. இதனால் தலங்காவற்பிள்ளையார் ஒரு காலத்தில் காயாரோகண மூத்த நயினார் கோயில் (சிவனின் மூத்த குமாரன்) என அழைக்கப்பட்டதாக வரலாற்று நு}ல்கள் தெரிவிக்கின்றன. காலக்கிரமத்தில் திருநெல்வேலி என்னும் இப்பதியை இங்கு எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் காவல்புரிந்து வருவதால் தலங்காவற் பிள்ளையார் என்று அழைக்கப்படலாயினர். முற்காலத்தில் இவ்வாலயம் கிழக்கிலும் மேற்கிலும் வாசல் உள்ளதாக இருந்தது பிள்ளையார் அடியார்களின் கனவில் காட்சி கொடுத்தருளி, கிழக்கு வாசலை மூடி மேற்கு வாசலை மாத்திரம் பாவிக்குமாறு கட்டளையிட்டதற்கிணங்கவே கிழக்கு வாசல் மூடப்பட்டு மேற்கு வாசல் உபயோகிக்கப்பட்டது. இன்றும், மேற்கு வாசலுடனேயே கோபுரம் அமைந்துள்ளது. ஓரு புறத்தே மணிக்கோபுரமும், மறுபுறத்தே அன்னதான மண்டபமுமாக ஆலய வாசல் திகழ்கின்றது. ஆலயத்தின் முகப்புக்கோயுரம் சுமார் நு}ற்றி ஆறு வருடத்தொன்மையானது. (இவ்வாலயத்தின் 1840-ஆம் ஆண்டுச் சாசனத்திலிருந்து சில குறிப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளன.) ஒவ்வொருவருடமும் ஆனி மாதத்துச் சதயநட்சத்திரத்திலன்று தீர்தோற்சவம் நடைபெறும் வண்ணம் அதற்குப் பதினைந்து தினங்களுக்கு முன்னர் கொடியேற்றம் நடைபெறும். ஆரம்பத்தில் பத்துத் தினங்களுக்கு மட்டுமே திருவிழா நடைபெற்றது.1973-ஆம் ஆண்டு முதல் அடியார்களின் வேண்டுதலுக்கிணங்க திருவிழாக்களின் தொகை பதினைந்தாக அதிகரிக்கப்பட்டது. திருவிழாக்களின் போது வசந்தமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் உள்வீதியும், வெளிவீதியும் உலாவருவார். அநேகமான திருவிழாக்களின் போதும் சுவாமியை வாகனத்தில் ஏற்றி, குடை, கொடி ஆலவட்டம் தீப்பந்தம் ஆகியவை ஏந்தியவண்ணம் அடியார்கள் தங்கள் தோளில் சுமந்து வீதி உலா வருவது முக்கிய அம்சமாகும். சுவாமி வெளிவீதி வரும்போது பல அடியார்கள் வீட்டுவாசலிலும் மண்டகப்படி வைத்து, பூசையும் நிவேதனமும் செய்யப்படும். வருடாந்தம் நடைபெறும் பதினைந்து திருவிழாக்களிலும் ஏழாம் நாளன்று இரவு தண்டிகை உற்வசமும், பத்தாம் நாளன்று சப்பற மஞ்ச உற்சவமும் பதின்மூன்றாம் நாளன்று இரவு சப்பற உற்சவமும், பதினான்காம் நாளன்று காலை ரத உற்சவமும் பதினைந்தாம் நாளன்று தீர்த்த உற்சவமும் நடைபெறும். இக் கோயிலுக்கான தேர் அடியார்களின் உதவியுடன் 1942-ஆம் ஆண்டில் செய்யப்பட்டது. இறையடி எய்திய நாகலிங்க ஆச்சாரியார் அவர்களின் கைவண்ணத்தில் சிற்ப சித்திர வேலைப்படுகளுடன் உருவான செயற்தேர். இவ்வாலயத்திற்கு மேலும் கம்பீரத்தை க் கொடுக்கின்றது. இத்தேரின் வெள்ளோட்டம். இன்றைக்குச் சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (17.06.1942) நடைபெற்றது. தேர்த் திருவிழாவன்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்குதலும், தேர் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு, ஆலயவாசலுக்கு வரும்போது சிதறு தேங்காய் அடித்தாலும் இன்று நடைபெற்று வருகின்றது. தேர்வெள்ளோட்டம் நடைபெற்றதற்கும் ஆலயவாசலில் இருக்கும் கிணற்றுக்கும் கூட ஒற்றுமையுண்டு இக்கிணற்றுநீர் உவர்ப்பாகவே என்று இருந்தது. இதனால் அடியார்கள் இந்நீரை கை,கால் அலம்பவும், நிவேதனப் பொருட்களை சுத்தம் செய்யவும் மட்டுமே பாவித்து வந்தனர். ஆனால் வெள்ளோட்டடம் நடைபெற்ற நாளிலிருந்து இக்கிணற்று நீர், உவர்தன்மை நீங்கி தேவ அமிர்தம் போன்று மாறியது. இன்றும் கோயிலை அண்மித்து இருக்கும் கிணறுகளில் நீர் உவர்ப்பாக இருக்கின்ற இக்கிணற்றின் நீர் மட்டுமே தனிச்சுவை நிரம்பியதாகவுள்ளதால், இதனையேங பல அடியார்கள் தம் வீட்டுப்பாவனைக்கு எடுத்துச் செல்கின்றனர். கோவிலின் தெற்கு மூலையில் அரச மரத்தின் கீழுள்ள வைரவர் விக்கிரகத்திற்கு அருகில் 1958ம் ஆண்டளவில் தீர்த்தக்கிணறும், தீர்த்த மண்டபமும் கட்டப்பட்டது. வருடந்தோறும் ஆனி மாதத்து சதய நட்சத்திரத்தன்று பிள்ளையாரும் அவரது அருட் தம்பியான சுப்பிரமணியரும் இங்கு தீர்த்தமாடி அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர். கோயிலின் உள் வீதியில் இரண்டு தீர்த்தக்கிணறுகள் உள்ளன. ஓன்று மூலஸ்தானத்திற்கு அருகிலும் மற்றது சனீஸ்வரன் கோயிலுக்கு அருகிலும் உள்ளது. சுனீஸ்வரன் ஆலயம் 1968-ம் ஆண்டில் அமைக்கப்பபட்டு கும்பாபிN~கம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் இங்கு நு}ற்றியெட்டுச் சங்குவைத்து சங்காபிN~கம் நடைபெற்று வருகின்றது. கோயிலின் மகா கும்பாபிN~கம் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. கோயில் பிரதம அர்ச்சகர் பிரம்மஸ்ரீ நா. சண்முகரத்தினக் குருக்கள் கும்பாபிN~கம் நடைபெறவில்லையே என்று 1968ம் ஆண்டு தை மாதம் தோன்றி பாலஸ்தாபனத்தைச் செய்யுமாறு கட்டளை இட்டதைத் தொடர்ந்து அதே வருடம் பங்குனி மாதம் பாலஸ்தாபனமும் வைகாசி மாதம் மகா கும்பாபிN~கமும் அடியார்கள் ஆதரவுடன் நடைபெற்றன. கோயில் மூலஸ்தான பிள்ளையார் விக்கிரம் மேற்கு நோக்கியவாறு இருக்கின்றது. சிறிய தெற்கு வாசலில் உற்சவ மூர்த்திகளான பிள்ளையாருடன் வள்ளி தெய்வானை சமேதராய் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். கோயில் உள்வீதியில் அர்ச்சனைக்கான பூ மரங்களுடன்,யாகசாலை,வாகனசாலை மடப்பள்ளி ஆகியனவும் உள்ளன. கோயிலின் திருப்பணி வேலைகளை அடியார்களே முன்னின்று நடத்தி வருகின்றனர். நிதி போதாது என்ற நிலை ஏற்படும்போதெல்லாம் தலங்காவலனே அடியார்கள் உள்ளத்தில் உட்புகுந்து நிதிகொடுத்து வருவதுபோல எந்தக் குறையுமின்றி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஓருநாள் பூசைசெய்து நிவேத்தியம் படைப்பதற்கு அர்ச்சகரிடம் அரிசி இல்லை. அரிசி வாங்கக் கையில் பணமும் இல்லை, இந்நிலையில் என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் பிள்ளையாரிடமே போய் முறையிடுவோம் என அர்ச்சகர் தமது வீட்டிலிருந்து புறப்பட ஆயத்தமாகியபோது அடியார் ஒருவர் தமது காரில் ஒரு மூடை அரிசியுடன் வந்தார் இதுவல்லோ தலங்காவலன் புதுமை! இதனையெண்ணி அர்ச்சகர் இன்றும் வியந்த வண்ணம் இருக்கின்றார். கோயில் ஆண்டுதோறும் திருவெம்பாவை உற்சவம் மானம்பூ உற்சவம் விநாயகர் சதுர்த்தி உற்சவம் பெருங்கதைப்படிப்பு, கயாமுகாசூர சங்காரம் ஆகியன வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.